Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#SouthAsianJuniorAthleticsChampionship - தமிழ்நாடு வீராங்கனை அபிநயா 2 தங்கப் பதக்கம் வென்று அசத்தல்!

09:56 PM Sep 13, 2024 IST | Web Editor
Advertisement

தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை அபிநயா 2 தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

Advertisement

சென்னை நேரு விளையாட்டரங்கில் தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடர் 29ஆண்டுகளுக்கு பிறகு களைகட்டி வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், இலங்கை, மாலத்தீவு, நேபால் என 7 தெற்காசிய நாடுகளில் இருந்து 174 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

மூன்று நாட்கள் நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் இந்தப் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இத்தொடரில், இந்தியா 21 தங்கம், 22 வெள்ளி, 5 வெண்கலம் என 48 பதக்கங்களுடன் முதலிடத்தையும், இலங்கை 9 தங்கம், 9 வெள்ளி, 17 வெண்கலம் என 35 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தையும் பிடித்தன.

இதையும் படியுங்கள் : AnnapurnaHotel விவகாரம் : “யார் மனதையும் புண்படுத்த வேண்டாம்” – BJP தொண்டர்களுக்கு வானதி சீனிவாசன் வேண்டுகோள்!

இந்நிலையில், மகளிர் 100மீ ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற தமிழ்நாடு வீராங்கனை அபிநயா தற்போது 100 மீ தொடர் ஓட்டத்திலும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் அபிநயா 2 தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

Tags :
AbhinayaGoldNews7Tamilnews7TamilUpdatessaacSouthAsianJuniorAthleticsChampionshiptamil naduwomen's 100m race
Advertisement
Next Article