"உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை அற்புதமான திட்டம் என தமிழ்நாடு வரவேற்கிறது" - அமைச்சர் எ.வ.வேலு!
சென்னை கொளத்தூர் ரெட்டேரி சாலை சந்திப்பு அருகில் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் மேம்படுத்தப்பட்டு வரும் கொளத்தூர் ஏரிக்கரையின் முன்னேற்றப் பணிகளை அமைசசர்கள் எ.வ.வேலு மற்றும் சேகர்பாபு உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். உடன் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்தித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை சார்ந்த பொறியாளர்கள் இருந்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு,
"கொளத்தூர் ரெட்டேரி சாலையில் உள்ள ஏரியை புதுப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தார்கள். அந்த வகையில் 7 மீட்டர் அகலமும், 600 மீட்டர் நீளமும் கொண்ட நடைப்பாதை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த ஏரியை 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் உயர்மட்ட மேம்பாலத்தின் கீழ் வருவதால் நெடுஞ்சாலைத்துறை சார்பாக ஒரு சில பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக இன்று ஆய்வு செய்தோம்.
நெடுஞ்சாலை துறையைச் சேர்ந்த கோட்ட பணியாளர்கள் மற்றும் பொறியாளர்கள் பணியை மேற்கொள்ள உள்ளனர். கொளத்தூர் செந்தில் நகரில் நகரும் படிக்கட்டு அமைக்கப்படும் என கூறி இருந்தது. அது தொடர்பான வழக்கு நடைபெற்றது அரசு சார்பாக வழக்கு வெற்றி பெற்றுள்ளது. 15.42 கோடி ரூபாய் செலவில் அதற்கான பணிகள் தொடங்கி விட்டது எனவும் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் அதன் பணிகள் முடிவடையும் எனவும் கூறினார்.
139 கோடி ரூபாய் செலவில் பாடி ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. 70 சதவீதம் பணிகள் நடைபெற்றுள்ளது. மீதம் உள்ள பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஏரியில் நீர் மேலாண்மை துறை ஒட்டி நடைப்பாதை வருகிறது. ஒப்பந்ததாரர் ஆகஸ்ட் மாதம் பணிகள் முடிவடையும் என தெரிவித்தார். அக்டோபர் மழைக்கு முன்பாக பணிகள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம்.
கொளத்தூரில் பிறக்க முடியவில்லை என திருவண்ணாமலை வாக்காளர்கள் வருத்தப்படுகிறார்கள். முதலமைச்சருக்கு ஆயிரம் பணிகள் இருந்தாலும் மாதம் மாதம் தனது தொகுதிக்கு வருகிறார். அதை பார்த்து நாங்களும் எத்தனை பணிகள் இருந்தாலும் தொகுதிக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.
திமுகவை எடப்பாடி பழனிசாமி உருட்டுக்கள் பலவிதம் என விமர்சனம் செய்தது குறித்தான கேள்விக்கு, அவர் ஆட்சியில் நடைபெறுவதை மீண்டும் நினைவுபடுத்துகிறார். யார் ஆளுங்கட்சியாக இருந்தாலும் மக்கள் கோரிக்கை நிறைவேற்றுவது தான் பார்க்க வேண்டும் அந்த ஆட்சியை விட இந்த ஆட்சி மக்களுடைய திட்டங்களை நிறைவேற்றுவதில் மும்முரமாக உள்ளது என தெரிவித்தார். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை அற்புதமான திட்டம் என தமிழ்நாடு வரவேற்கிறது.
தங்கள் அடையாளத்தை காட்டிக் கொள்வதற்காக மக்கள் மறந்துவிடக்கூடாது வெளியே வந்து ரொம்ப நாள் ஆகிவிட்டதால் சுற்றுப்பயணத்தை தொடங்கி இருக்கிறார். தேர்தல் நேரத்தில் மக்கள் எடை போட்டு பார்ப்பார்கள் எங்கள் அணி 200க்கு 200 வெற்றி பெறும் எனவும் எதிர்கட்சித் தலைவர் நாங்கள் அவரை மதிக்கிறோம் தனது அடையாளத்தை காட்டி கொள்வதற்காக அங்கொன்றும் இங்கொன்றும் வந்தது எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார் பேசுவதில் உண்மை இல்லை".
பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளது குறித்தான கேள்விக்கு, "நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிரதமர் வந்தார். சட்டமன்றத் தேர்தல் வரப்போகிறது, அதற்காக வருவார். இந்த மண் திராவிட மண் பெரியார் அண்ணா கலைஞர் என மும்மூர்த்தி பண்பட்டு உள்ள மண் எந்த காலத்திலும் பிரதமர் வந்தாலும் அவரின் சகாக்கள்
வந்தாலும் காவிகள் காலூன முடியாது என தெரிவித்தார்.
சைதாப்பேட்டை மேம்பாலம் எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்விக்கு, நேற்று முன்தினம் கூட சைதாப்பேட்டை மேம்பால பணிகளை மூன்று கிலோமீட்டர் நானே நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டோம். பொங்கல் தினத்தில் சைதாப்பேட்டை மேம்பாலத்தை முதலமைச்சர் திறக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.
மத்திய கைலாஷ் பகுதிகளில் நானே பலமுறை பயணித்திருக்கிறேன். அந்த பகுதிகளில் வீட்டிற்கு ஒரு கார் என்று இல்லாமல் வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் கார் உள்ளது. அந்தப் பகுதியில் உள்ள சாலைகளை விரிவுபடுத்தி சர்வீஸ் சாலையை அகலப்படுத்தி மேம்பால பணிகள் முடிந்த பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் இருக்காது" என்று தெரிவித்துள்ளார்.