Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விளையாட்டு துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலம் தமிழ்நாடு - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

12:36 PM Feb 23, 2024 IST | Web Editor
Advertisement

விளையாட்டு துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை கலைவாணர் அரங்கத்தில் சர்வதேச,  தேசிய மற்றும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ஊக்க தொகைக்கான காசோலை மற்றும் 3 சதவீத விளையாட்டு வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டிற்கு கீழ் 4 வீராங்கனைகளுக்கு அரசு பணி ஆணை வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

இதையும் படியுங்கள் : சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை! அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பங்கேற்பு!

இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ.16.31 கோடி மதிப்பில் 601 வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார்.

நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

"கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ. 3.80 கோடி உயரிய ஊக்கதொகை வழங்கி உள்ளோம். விளையாட்டு துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டில் விளையாட்டு துறைக்கு பாராட்டும் அங்கீகாரமும் குவிந்து வருகிறது. இதையடுத்து, விளையாட்டுத்துறையில் சிறந்த மாநிலம் என்ற விருதை தமிழ்நாடு பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு விருது பட்டியலில் 8-வது இடத்தில் இருந்தது. தொடர்ந்து,  இந்த ஆண்டு கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் 38 தங்கப்பதக்கம் 39 வெண்கல என மொத்தம் 98 பதக்கங்கள் வென்று, தமிழ்நாடு இரண்டாம் இடத்திற்கு முன்னேறி உள்ளது.

இந்தியாவில் விளையாட்டு துறையில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்க வேண்டும் என்பது முதலமைச்சரின் விருப்பமாக உள்ளது.  முதலமைச்சரின் சொந்த நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் விளையாட்டு துறைக்காக கொடுத்துள்ளார்.  மேலும், விளையாட்டு துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது"

இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Tags :
#SportsChennaidisabled peoplekehlo indiaminister udayanidhi stalinspeechtamil nadu
Advertisement
Next Article