Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விஜய் ஹசாரே கோப்பை தொடருக்கான தமிழ்நாடு அணி அறிவிப்பு - கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமனம்

08:15 AM Nov 11, 2023 IST | Jeni
Advertisement

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தமிழ்நாடு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

இந்தியாவில் நடைபெறும் பிரபல ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை தொடர், இந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி தொடங்குகிறது. இதுவரை தமிழ்நாடு அணி 5 முறை விஜய் ஹசாரே கோப்பையை வென்றுள்ளது. 2017 ஆம் ஆண்டுக்கு பின்னர், இத்தொடரில் கோப்பையை வெல்லாத தமிழ்நாடு அணி, கடந்த ஆண்டு காலிறுதி வரை முன்னேறி வெளியேறியது.

இந்நிலையில், நடப்பு ஆண்டு நடைபெறவுள்ள விஜய் ஹசாரே கோப்பை தொடருக்கான தமிழ்நாடு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சாய் சுதர்சன், ஜெகதீசன், பிரதோஷ் ரஞ்சன் பால், விஜய் சங்கர், இந்திரஜித், சாய் கிஷோர், எம்.சித்தார்த், சி.வி.வருண், குல்தீப் ரம்பல் சென், சந்தீப் வாரியர், நடராஜன், ஷாருக் கான், சோனு யாதவ், அபராஜித், விமல் குமார் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இதையும் படியுங்கள் : அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்த தொடர் நடைபெறும் சமயத்தில், இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான டி20 தொடர் நடைபெற உள்ளது. இந்த டி20 தொடரில் வாஷிங்டன் சுந்தர் பங்கேற்க உள்ளதால், அவருக்கு பதில் தமிழ்நாடு அணிக்கு கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags :
AnnouncementcaptainCricketDineshKarthikSquadTamilNaduVijayHazareTrophy
Advertisement
Next Article