Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜன.6-ல் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை - சபாநாயகர் #Appavu அறிவிப்பு!

01:16 PM Dec 20, 2024 IST | Web Editor
Advertisement

வரும் 2025-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

Advertisement

தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த 9 மற்றும் 10 ஆகிய 2 நாட்கள் கூடியது. இதில் பல்வேறு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், அடுத்த கூட்டம் கூடும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து சட்டப்பேரவை கூட்டத் தொடரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முடித்து வைத்து உத்தரவிட்டார். இந்த நிலையில், 2025-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

இது குறித்து சபாநாயகர் அப்பாவு கூறியதாவது,

"ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும். அன்று காலை 9 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த உள்ளார். இந்த முறை ஆளுநர் தனது உரையை முழுமையாக வாசிப்பார் என நம்புகிறோம். கடந்த முறை முதல் பக்கத்தையும், கடைசி பக்கத்தையும் மட்டுமே ஆளுநர் படித்தார். குளிர்கால சட்டசபை கூட்டத்தொடர் 2 நாட்கள் மட்டுமே நடந்தது. இது முதல்முறை அல்ல. தேர்தல், வெள்ளம் உள்ளிட்ட பிரச்னைகளால் பேரவையை அதிக நாட்கள் நடத்த முடியவில்லை.

பேரவை குறைந்த நாட்கள் நடந்தாலும் மக்கள் பணியில் எந்த குறையும் இல்லை. கூட்டத்தொடர் எவ்வளவு நாட்கள் நடைபெறும் என்பது அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். சட்டப்பேரவையில் ஆனுசருக்கு உரை நிகழ்த்ததான் அனுமதியே தவிர, சொந்த கருத்துகளை சொல்ல அனுமதி இல்லை. அவையின் உள்ளே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 234 உறுப்பினர்களுக்கு மட்டுமே கருத்து சொல்ல அனுமதி. இதுதான் நாடாளுமன்ற ஜனநாயகம். சட்டப்பேரவைக்கும் இது பொருந்தும்"

இவ்வாறு சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

Advertisement
Next Article