Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவை: பட்ஜெட்கள் மீது இன்று விவாதம்!

07:34 AM Feb 21, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவையில், பொது மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் இன்று (பிப்.21) நடைபெறுகிறது. விவாதத்துக்கு பதிலளித்து நிதியமைச்சரும், வேளாண் துறை அமைச்சரும் நாளை உரையாற்றுகின்றனர்.

Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப். 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், கடந்த பிப். 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றினார்.

தொடர்ந்து தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று முன்தினம் (பிப். 19) தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் ஏராளமான புதிய அறிவிப்புகள் மற்றும் துறை வாரியாக திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். இதன்பின்னர் வரவு செலவு குறித்த விவரங்களையும் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்.

தொடர்ந்து நேற்று (பிப். 20) 2024-25-ம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சட்டப்பேரவை கூட்டம் காலை 10 மணிக்கு கூடியது. இந்த பட்ஜெட் உரையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பல்வேறு வேளாண் சார்ந்த அறிவிப்புகள் மற்றும் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். முன்பண மானிய கோரிக்கைகள் மீது விவாதமின்றி வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டது.

பின்னர், தமிழ்நாடு நிதி ஒதுக்கசட்ட முன்வடிவை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிமுகம் செய்தார். இந்த சட்ட முன்வடிவு நேற்றே ஆய்வு செய்து நிறைவேற்றப்பட்டது. இதன்படி, அரசுக்கு துறைகள் வாரியாக கோரியநிதி வழங்கப்பட்டதாக, பேரவைத் தலைவர் அறிவித்தார்.

இதையடுத்து, இன்று பொது மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுகிறது. விவாதத்துக்கு பதிலளித்து நிதியமைச்சரும், வேளாண் துறை அமைச்சரும் நாளை (பிப். 22) உரையாற்றுகின்றனர். அத்துடன் அரசு தீர்மானங்கள், சட்ட முன்வடிவுகளும் நிறைவேற்றப்பட உள்ளன.

Tags :
ADMKAgri BudgetBudget 2024CMO TamilNaduDMKMK Stalinmrk panneer selvamNews7Tamilnews7TamilUpdatesTamilnadu budgetTAMILNADU BUDGET 2024Thangam thennarasuTN Agriculture Budget 2024TN Assembly
Advertisement
Next Article