Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"தமிழ்நாடு என்பது வெறும் பெயர் அல்ல அடையாளம்" - வழக்கறிஞர் திருத்த மசோதாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு!

வழக்கறிஞர் திருத்த மசோதாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
04:09 PM Feb 23, 2025 IST | Web Editor
Advertisement

தற்போது நடைமுறையில் இருக்கும், 1961ம் ஆண்டின் வழக்கறிஞர் சட்டத்தில் திருத்தம் செய்து, புதிய மசோதா தாக்கல் செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான வரைவு சட்ட மசோதாவை, மத்திய சட்டத்துறை மற்றும் நீதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. வரைவு சட்ட மசோதா குறித்து வழக்கறிஞர் சங்கங்கள், அமைப்புகள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் கருத்து தெரிவிக்க, வரும் 28ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

வழக்கறிஞர் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு, இந்திய பார் கவுன்சில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், வழக்கறிஞர் சங்க கூட்டமைப்பு, வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நிலையில், வழக்கறிஞர் திருத்த மசோதாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,

"சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வாதம் விளக்கு" என்றார் பேரறிஞர் அண்ணா. வழக்கறிஞர் திருத்த மசோதா 2025 என்பது சட்டத்துறை சுயாட்சியின் மீதான தாக்குதல் ஆகும். 2014 முதல் நீதித்துறையின் சுதந்திரத்தை பாஜக அரசு சிதைத்து வருகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவின்சிலில் பெயர் மெட்ராஸ் பார் கவுன்சில் என்று மறுபெயரிட விரும்புகிறது. தமிழ் மீதான பாஜகவின் வெறுப்பு மசோதாவில் தெளிவாக தெரிகிறது. தமிழ்நாடு என்பது வெறும் பெயர் அல்ல, அது எங்களின் அடையாளம். இந்த மசோதாவை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை திமுக வலியுறுத்துகிறது"

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags :
AdvocatesAdvocates Amendment BillAdvocates Amendment Bill 2025cm stalinCMO TAMIL NADUDMKMK Stalinnews7 tamilNews7 Tamil Updates
Advertisement
Next Article