Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 27 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை - தமிழ்நாடு அரசு உத்தரவு 

07:11 AM Dec 08, 2023 IST | Web Editor
Advertisement

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 27 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

இந்த அறிவிப்பின்படி, தமிழகத்தில் மத்திய சிறைகளில் நீண்ட நாள்களாக அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை விடுதலை செய்வதற்கு விதிமுறைகளை வகுக்கப்பட்டன. இதில், சிறையில் நன்னடத்தையுடன் மொத்த தண்டனையில் 66 சதவீதம் அனுபவித்தவா்களும், 10 ஆண்டுகள் சிறையில் உள்ளவா்களும், விடுதலை செய்யப்படுவதற்கு தகுதியானவா்கள் என அடையாளம் காணப்பட்டனா்.

அதேவேளையில் பாலியல் துன்புறுத்தல், முறைகேடு, வழிப்பறி, மோசடி, பயங்கரவாத குற்றங்கள், மாநிலத்துக்கு எதிரான குற்றங்கள், சிறையில் இருந்து தப்பித்தல், கள்ள நோட்டு தயாரித்தல், பெண்களுக்கு எதிரான குற்றம், வரதட்சிணை மரணம், பொருளாதாரக் குற்றங்கள், கள்ளச்சந்தை, கடத்தல், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், விஷம் கலந்த பொருள்களை விற்பனை செய்தல், ஜாதி, மத ரீதியான வன்முறை ஈடுபட்டவா்கள் ஆகிய குற்றங்களில் தண்டனை பெற்றவா்கள் விடுதலை பெற தகுதியவற்றவா்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், தகுதியுடைவா்கள் கண்டறியப்பட்டு, படிப்படியாக விடுதலை செய்யப்படுகின்றனா். இதன் ஒரு பகுதியாக வேலூா் மத்திய சிறையில் இருந்து 7 போ், புழல் சிறையில் இருந்து 3 போ், சேலம், கோயம்புத்தூா் மத்திய சிறைகளில் இருந்து தலா 4 போ், வேலூா் பெண்கள் தனிச்சிறையில் இருந்து ஒருவா், மதுரை மத்திய சிறை, பாளையங்கோட்டை மத்திய சிறை, கடலூா் மத்திய சிறை, புழல் பெண்கள் தனிச்சிறை ஆகியவற்றில் தலா 2 போ் என மொத்தம் 27 கைதிகள் வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டனா்.

 

Advertisement
Next Article