Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தக் லைஃப் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி!

தக் லைஃப் படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
12:51 PM Jun 04, 2025 IST | Web Editor
தக் லைஃப் படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
Advertisement

பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘தக் லைஃப்’. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Advertisement

மெட்ராஸ் டாக்கிஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். அண்மையில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் மக்களிடையே வரவேற்பை பெற்றது. தக் லைஃப் திரைப்படம் நாளை வெளியாக உள்ள இந்நிலையில், சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

நாளை முதல் காட்சி 9 மணிக்கு தொடங்கி, இறுதிக் காட்சி 2 (5 காட்சிகள்) மணிவரை திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

Tags :
Kamal haasanSilambarasanspecial screeningThug LifeTN Govt
Advertisement
Next Article