Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் #MKStalin!

சென்னை நந்தம்பாக்கத்தில் தமிழ்நாடு காலநிலை மாற்ற 3வது உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
11:44 AM Feb 04, 2025 IST | Web Editor
Advertisement

காலநிலை மாற்றம் உலகத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை கட்டுப்படுத்தவும், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்கவும் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், பசுமை தமிழக இயக்கம் மற்றும் தமிழ்நாடு சதுப்பு நிலை இயக்கம் ஆகிய மூன்று இயக்கங்களை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

இதையும் படியுங்கள் : “பாதுகாப்பு அளிக்கும் காவல் நிலையமே பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது” – #OPS கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் செயல்படும் இந்த காலநிலை மாற்ற நிர்வாக குழுவில் பல்துறை வல்லுநர்கள் மற்றும் பல்துறை மூத்த அரசு செயலாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில், தமிழ்நாடு காலநிலை மாற்ற 3வது உச்சி மாநாட்டை சென்னை நந்தம்பாக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

இந்த உச்சி மாநாடு இன்றும் நாளையும் என 2 நாட்கள் நடைபெறுகிறது. தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்சுற்றுச்சூழல் விருதுகளை வழங்கி பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மேலும் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான இணையதளம், தொழிற்சாலை பசுமை குறியீடு போன்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

Tags :
Chennaicm stalinCMO TAMIL NADUMK Stalinnews7 tamilNews7 Tamil Nadu
Advertisement
Next Article