Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் வாக்காளர் அடையாள அட்டை மாயம் - போலீசில் புகார்.!

10:59 AM Jan 31, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ தலைமை தேர்தல் அதிகாரியின் அடையாள அட்டை மாயமானதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக சத்ய பிரதா சாகு பணியாற்றி வருகிறார். இவரது அலுவலகம் தலைமைச் செயலகத்திற்குள் செயல்பட்டு வருகிறது. இவருக்கான அடையாள அட்டையை மத்திய தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது.

இந்த நிலையில் அடையாள அட்டையை புதுப்பிப்பதற்காக அதனை டெல்லியில் உள்ள மத்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப முடிவு செய்தார். அதற்காக அடையாள அட்டையை தனது உதவியாளர் சரவணன் என்பவர் மூலம் தபால் மூலம் அனுப்புவதற்காக உத்தரவிட்டதாக தெரிகிறது.

அதன்படி சரவணன் தலைமை தேர்தல் அதிகாரியின் அடையாள அட்டையை தபால் நிலையம் எடுத்து சென்ற போது அங்கே தவறிவிட்டதாக தெரிகிறது.  இதையடுத்து உதவியாளர் சரவணனின் அடையாள அட்டை மாயமானது குறித்து கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து புகாரை பெற்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் தேர்தல் அடையாள அட்டையே தொலைந்து போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Election commissionias officermissingSathya Pratha SahooVoter Cardvoter id
Advertisement
Next Article