நாளை மறுநாள் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் - முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க வாய்ப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 14-ஆம் தேதி நிதியமைச்சர் தங்கம் தென்னரசால் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு புதிய திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து சட்டப்பேரவையில் தற்போது துறை ரீதியிலான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
அத்துடன் துறை ரீதியாக பல்வேறு முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் (ஏப்ரல்.17) தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் மாலை 6 மணியளவில் நடக்கும் இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.
நடைபெறப்போகும் இந்த அமைச்சரைக் கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம், புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிப்பது, திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.