தமிழ்நாடு பட்ஜெட் மார்.14-ல் தாக்கல்!
சென்னை தலைமைச் செயலகத்தில் பட்ஜெட் குறித்து கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் பட்ஜெட் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, “தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 14ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். வேளாண் நிதிநிலை அறிக்கை மார்.15ஆம் தேதி தாக்கல் செய்யப்படும். 2025- 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை அமைச்சர் தங்கம் தென்னரசால் தாக்கல் செய்யப்படும்” என தெரிவித்தார்.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இரண்டு வாரங்கள் நிறைவடைந்த நிலையில், அடுத்தடுத்து மாநில அளவில், அந்தந்த மாநில சட்டமன்றங்களில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதன்படி 2025-2026-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் மார்ச்-ல் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த ஆட்சியில் தாக்கல் செய்யப்பட உள்ள இறுதி முழு பட்ஜெட் இது என்பதால் இதை அரசு மிக முக்கிய பட்ஜெட்டாக கருதுகிறது. எனவே மக்கள் நலன் சார்ந்த புதிய அறிவிப்புகள், மக்களால் ஏகோபித்த ஆதரவுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டங்களின் விரிவாக்கம் போன்ற அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறும் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.