Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரம்! அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சுக்கு தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கண்டனம்!

05:12 PM Sep 06, 2024 IST | Web Editor
Advertisement

சென்னையில் உள்ள அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரத்தில், மகாவிஷ்ணுவிற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மிரட்டல் விடுத்திருப்பதாகக் கூறி தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்த விவகாரம் குறித்து, கோவையில் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்த தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறியதாவது:

அன்பில் மகேஸை விட வயதில் சிறியவர் மகாவிஷ்னு. அவருக்கு உள்ள மெச்சூருட்டி கூட அமைச்சருக்கு இல்லை. ஒரு ரவுடி பேசுவது போல் அமைச்சர் அன்பில் மகேஸ் பேசி, தம்பி மகாவிஷ்ணு மீது மிரட்டல் விடுத்திருக்கிறார்.இது கண்டிக்கதக்கது. பாவம் புண்ணியம் எல்லாம் மதத்திலும் உள்ளது. எனவே இது ஒரு மதம் சார்ந்தது என்று சொல்ல முடியாது. தமிழ் உங்கள் பிரச்னையில்லை.கடவுள் இல்லை என்கிற சித்தாந்தத்தை மனதில் வைத்து கொண்டு இந்த விவாகரத்தை அணுகுகிறார்கள். கடவுள் மறுப்பை கொள்கையாக கொண்டுள்ளதால் இப்படி மிரட்டல் விடுத்துள்ளாரகளா?

இந்த மிரட்டல் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது,அதேபோல் தனி மனித சுதந்திரத்திற்க்கு எதிரானது. இதற்கெல்லாம் மேலாக மதத்தை வைத்து அமைச்சர் மிரட்டி இருந்தால் அது மத சுதந்திரத்திற்க்கு எதிரானது. ஆனால் இது மதத்திற்கு எதிரான ஒரு மிரட்டல் என்று உறுதியாக சொல்ல முடியும். இந்த விவாகரத்தை பாஜக எதிர்கொள்ளும். அன்பில் மகேஸ் பாவம் புண்ணியத்தை நம்பாதவரா? அவரது தலைவர் கருணாநிதி சிலை முன்பு படையல் போட்டு வணங்குகிறார்களே? இதை எப்படி பார்ப்பது.வீட்டில் ஒரு வேஷம் ,வெளியில் ஒரு வேஷம் போடுகிறார்கள். இந்த மிரட்டலுக்கு இந்த நாடு ,இந்து மதம் அஞ்சாது.

திராவிட அரசு , இந்த விவாகரத்தில் ஆன்மீக சொற்பொழி நடத்துபவர்களை மிரட்டி பார்க்கிறது.இதற்கு ஆன்மீக சொற்பொழிவாளர்கள் அஞ்ச மாட்டார்கள்.இந்து மதமும் அஞ்சாது. இந்து மதத்தின் மீதும், பச்சை தமிழன் திருவள்ளுவர் மீதும் நீங்கள் தொடுத்திருக்கிற போரை பாஜக எப்படி எதிர் கொள்வோம் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.

இவ்வாறு தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறியுள்ளார்.

Tags :
Anbil Maheshnews7 tamilSpiritual DiscourseSRSEKHARTN Ministertn schools
Advertisement
Next Article