Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இந்தியாவில் மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு 30% முன்னிலை!

08:35 AM Apr 01, 2024 IST | Web Editor
Advertisement

2024 ஆம் நிதியாண்டில் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு 30 சதவீதத்துடன் முன்னணி மின்னணுப் பொருட்களின் ஏற்றுமதியாளராக திகழ்கிறது. 

Advertisement

இந்தியாவிலிருந்து மின்னணு பொருட்களை உலக நாடுகளுக்கு அதிகமான அளவில் ஏற்றுமதி செய்து அதன் மூலம் அதிக வருவாய் ஈட்ட மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் இதன் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  அந்த வகையில், இந்த ஆண்டும் மிகப் பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, மின்னணு பொருட்களை ஏற்றுமதி கடந்த 2018 ஆம் ஆண்டு 0.1% இருந்த நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு 0.3%, 2020 ஆம் ஆண்டு 0.2%, 2021 ஆம் ஆண்டு 1.7%, 2022 ஆம் ஆண்டு 1.9%, 2023 ஆம் ஆண்டு 5.4 % ஆக படிபடியாக உயர்ந்துள்ளதாக

இதையும் படியுங்கள் : “இந்த அவமதிப்பு- அவர் பெண்மணி என்பதாலா? அல்லது பழங்குடி என்பதாலா? அல்லது அரசமைப்புச் சட்டம் ஒரு பொருட்டில்லை என்பதாலா?” – விசிக தலைவர் திருமாவளவன்!

இந்நிலையில், 2024 ஆம் நிதியாண்டில் மின்னணு பொருட்களை உலக நாடுகளுக்கு அதிகமான அளவில் ஏற்றுமதி செய்து 7.4% ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு அறிக்கையில்  தகவல் தெரிவித்துள்ளது. மின்னணு அமைப்பு வடிவமைப்பு மற்றும் உற்பத்தி (ESDM) சரக்குகளின் மொத்த ஏற்றுமதியில் 2024 ஆம் நிதியாண்டில் 30% மின்னணு பொருட்கள் உற்பத்தியுடன் இந்தியாவின் முன்னணி மின்னணுப் பொருட்களின் ஏற்றுமதியாளராக தமிழ்நாடு தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

Tags :
electronicsexportsIndiatamil nadu
Advertisement
Next Article