Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ் மொழி பாரம்பரிய மாதம் குறித்த தீர்மானம் - அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிமுகம்!

08:05 AM Jan 16, 2025 IST | Web Editor
Advertisement

ஜனவரியை தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக அறிவிக்கக் கோரி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

ஜனவரியை தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக அறிவிக்கக் கோரி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீா்மானம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்தத் தீர்மானத்தை, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க எம்.பி. ராஜா கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான 15 எம்.பி.க்கள் கொண்டு வந்துள்ளனர்.

அவர்களில் ராஜா கிருஷ்ணமூர்த்தியைச் சேர்த்து 6 பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். இதுதொடா்பாக ராஜா கிருஷ்ணமூா்த்தி கூறுகையில், ‘வெவ்வேறு மொழிகள், கலாசாரங்கள், சிந்தனைகள் மற்றும் பாரம்பரியங்களின் தளமாக அமெரிக்கா உள்ளது. தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கராகிய நான், தமிழ் மொழி, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை அமெரிக்கா மற்றும் உலகம் முழுதும் கெளரவிக்கும் தீர்மானத்தை கொண்டு வந்ததற்கு பெருமைப்படுகிறேன்.

இந்தத் தீர்மானம் 3.50 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் வம்சாவளி அமெரிக்கர்களின் வளமை, தனித்துவமான கலாசாரம், வியக்கத்தக்க சாதனைகள் மீது ஒளி வீசும்’ என்றார். இந்தத் தீர்மானத்துக்கு அமெரிக்காவில் உள்ள தமிழ் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

Tags :
AmericaNews7Tamilnews7TamilUpdatesparliamentPongal 2025Tamil
Advertisement
Next Article