Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ் சினிமா 2024 | 'லவ்வர்' முதல் 'லப்பர் பந்து' வரை... சிறுபட்ஜெட்டில் ஹிட் கொடுத்த படங்கள்!

09:15 PM Dec 29, 2024 IST | Web Editor
Advertisement

இந்த ஆண்டில் சிறுபட்ஜெட்டில் எடுக்கப்பட்டு நல்ல வரவேற்பை பெற்ற படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Advertisement

இன்னும் சில தினங்களில் 2024 ஆம் ஆண்டு முடிவுக்கு வருகிறது. இந்த ஆண்டில் பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பல படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யாமல் போனது. ஆனால், சிறுபட்ஜெட் படங்கள் பல பட்டிதொட்டி எங்கும் ஹிட்டானது. அவை என்னென்ன படங்கள் என்பதை பார்க்கலாம்.

லவ்வர்

பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் லவ்வர். காதலை மையப்படுத்தி ரூ. 6 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் சுமார் ரூ. 40 கோடி வரை வசூல் பெற்றது. அதனுடன் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்த மணிகண்டன் மற்றும் கௌரி பிரியாவின் நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. அவர்களின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. இந்த படம் வெளியான சமயத்தில் இப்படத்தின் பாடல்கள் இணையத்தில் டிரெண்டிங்கில் இருந்தது. இப்படத்தின் இடம்பெற்றுள்ள தேன்சுடரே பாடலை இன்றளவும் ரசிகர்கள் கொண்டடி வருகின்றனர்.

மகாராஜா

நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் மகாராஜா. மகளுக்கு நடக்கும் அநீதியை தட்டி கேட்கும் கதைதான் இதன் ஒன்லைன். ரூ. 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் இந்தியாவில் ரூ. 100 கோடிக்கும் அதிக வசூலைப் பெற்றது. இந்தியாவில் மட்டுமல்லாது சீனாவிலும் வெளியாகி இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

வாழை

இயக்குநர் மாரிசெல்வராஜின் சிறுவயதில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் ‘வாழை’. நடிகர்கள் கலையரசன், திவ்யா, நிகிலா விமல் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை பார்த்த இயக்குநர்கள், நடிகர்கள் என பலரும் இப்படத்தை பாராட்டினர். ரூ. 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் சுமார் ரூ. 60 கோடி வசூலைப் பெற்றது.

கொட்டுக்காளி

‘கூழாங்கல்’ பட இயக்குநர் வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னாபென் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘கொட்டுக்காளி’. இப்படம் சர்வதேச அளவில் பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளையும் அள்ளியது. கதை மெதுவாக நகர்ந்தாலும் ரசிகர்களுக்கு ஒரு இடத்தில் கூட Bore அடிக்காமல் இயக்குநர் இப்படத்தை சிறப்பாக கொண்டு சென்றிருந்தார். வசூல் ரீதியாக படம் சோபிக்கவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது. இப்படம் முற்றிலும் மாறுபட்ட கதைகளத்தில் உருவாக்கப்பட்டிருந்தது.

லப்பர் பந்து

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிகர்கள் ’அட்டக்கத்தி’ தினேஷ், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘லப்பர் பந்து’. கிரிக்கெட், காதல் ஆகியவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களை கவர்ந்தது. இந்தப் படம் ரூ. 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ. 45 கோடி வரை வசூலித்தது.

ஜமா

கூத்து கலைஞர்களின் வாழ்வியலையும் அவர்களின் வலி அதற்குள் நடக்கும் அரசியல் உள்ளிட்டவற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் ‘ஜமா’. இயக்குநராகாவும் நடிகராகவும் முதல் படத்திலேயே கவனம் பெற்றார் பாரி இளவழகன். இந்தப் படம் பாக்ஸ் ஆஃபிசில் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

Tags :
KottukkaaliLook Back 2024loverLubber PandhumovieNew Year 2025news7 tamilRewind 2024Tamil Cinem aYear End
Advertisement
Next Article