Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இந்தியாவில் #Tablet விற்பனை இருமடங்காக உயர்வு - ஆய்வில் வெளியான தகவல்!

11:42 AM Sep 01, 2024 IST | Web Editor
Advertisement

இந்தியாவில் நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டில் 18 லட்சத்துக்கும் அதிகமான டேப்லெட் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

Advertisement

இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான இன்டா்நேஷனல் டேட்டா காா்ப்பரேஷன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, "நடப்பாண்டின் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான இரண்டாவது காலாண்டில் நாட்டில் 18 லட்சத்துக்கும் அதிகமான டேப்லெட் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கலந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இதன் மதிப்பு 178.1 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதேபோல், கீபோர்டுடன் பிரித்துக்கொள்ளக் கூடிய டிடாச்சபிள் விற்பனையும் 23.6 சதவிகிதம் வளா்ச்சி அடைந்துள்ளது.

நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில் சாம்சங் நிறுவனம் 48.7 சதவீத சந்தைப் பங்குடன் டேப்லெட் விற்பனையில் முன்னிலை வகிக்கிறது. தொடா்ந்து ஏசா் நிறுவனம் 23.6 சதவீதமும், ஆப்பிள் நிறுவனம் 9.5 சதவீதமும் விற்பனை செய்யப்படுகின்றன. அதேபோல் லெனோவா 6.9 சதவீதமும், ஷாவ்மி 4.7 சதவீதமும் டேப்லெட் விற்பனையாகின்றன."

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
businessGadjetsIndiaresearchTablet
Advertisement
Next Article