Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வங்கதேசத்திற்கு எதிரான #T20Cricket | SKY தலைமையில் இந்திய அணி அறிவிப்பு!

08:45 AM Sep 29, 2024 IST | Web Editor
Advertisement

வங்கதேசத்திற்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்தியா வங்க தேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து மழை குறுக்கீடு செய்த காரணத்தினால் முதல் நாளில் 34 ஓவர்கள் மட்டுமே பந்து வீசப்பட்டது. வங்கதேச அணி 107 ரன்னுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இந்த நிலையில் நேற்று இரண்டாவது நாளில் குறைந்தபட்சம் 50 ஓவர்களாவது போட்டி நடத்தப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். வானிலை அறிக்கையிலும் முதல் நாளை விட இரண்டாவது நாள் ஓர் அளவுக்கு சுமாராகவே இருந்தது. நேற்றும் மழையின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக மழை நின்றால் கூட போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக இரண்டாவது நாள் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டு விட்டது.

இந்த நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவிருக்கும் சூா்யகுமாா் யாதவ் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் மயங்க் யாதவ் சோ்க்கப்பட்டுள்ளாா். நடப்பாண்டு ஐபிஎல் போட்டியின்போது ஏப்ரலில் காயம் கண்ட அவா், அதன் பிறகு முதல் முறையாக களம் காணவிருக்கிறாா்.

3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரின் முதல் ஆட்டம், அக்டோபா் 6-ஆம் தேதி குவாலியரிலும், 2-ஆவது ஆட்டம் 9-ஆம் தேதி டெல்லியிலும், 3-ஆவது ஆட்டம் 12-ஆம் தேதி ஹைதராபாதிலும் நடைபெறவுள்ளது.

அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள்

சூா்யகுமாா் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சா்மா, சஞ்சு சாம்சன் (வி.கீ.), ரிங்கு சிங், ஹா்திக் பாண்டியா, ரியான் பராக், நிதீஷ்குமாா் ரெட்டி, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தா், ரவி பிஷ்னோய், வருண் சக்கரவா்த்தி, ஜிதேஷ் சா்மா (வி.கீ.), அா்ஷ்தீப் சிங், ஹா்ஷித் ராணா, மயங்க் யாதவ்.

Tags :
BangladeshCricketIndiaT20 cricket
Advertisement
Next Article