Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டி20 உலக கோப்பை | முதல்முறையாக இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா!... முடிவுக்கு வந்த ஆப்கானிஸ்தான் அணியின் கனவு...!

08:30 AM Jun 27, 2024 IST | Web Editor
Advertisement

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, ஆப்கானிஸ்தான் அணி வரலாற்று தோல்வியை சந்தித்துள்ளது.முதல்முறையாக இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா.

Advertisement

2024 டி20 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி தென்னாப்பிரிக்கா அணியும் சிறப்பான பந்துவீச்சால் 11.5 ஓவர்களில் 56 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக அஸ்மத்துல்லா ஓமர்சாய் 10 ரன்கள் எடுத்திருந்தார். உமர்சாய் மட்டுமே அந்த அணிக்காக இரட்டை இலக்கை தொட்டார்.  தென்னாப்பிரிக்கா சார்பில் மார்கோ ஜான்சன் மற்றும் தப்ரேஸ் ஷம்சி அதிகபட்சமாக தலா 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர். இதுபோக, ரபாடா மற்றும் நோர்க்யா தலா 2 விக்கெட்களையும் எடுத்திருந்தனர்.

57 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 8.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு இலக்கை விரட்டி வெற்றிபெற்றது. இதன்மூலம், தென்னாப்பிரிக்கா அணி உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.  நடப்பு டி20 உலகக் கோப்பை போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதியோடு வெளியேறியது.

Tags :
SA v AFGsemi finalt20 worldcup
Advertisement
Next Article