டி20 உலகக் கோப்பை : மழையால் நியூசிலாந்து - பப்புவா நியூ கினியா போட்டி தாமதம்!
டி20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து மற்றும் பப்புவா நியூ கினியா அணிகளுக்கு இடையிலான போட்டி மழையினால் தாமதமாகியுள்ளது.
20 அணிகள் பங்கேற்றும் விளையாடி வரும் 9வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் கடந்த 2 ஆம் தேதி தொடங்கி அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 55 போட்டிகளுக்கு இதுவரை 38 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இவற்றில் ஆப்கானிஸ்தான், இந்தியா, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய எட்டு அணிகளும் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெறும் 39-வது லீக் போட்டியில் நியூசிலாந்து - பப்புவா நியூ கினியா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்நிலையில் டிரினிடாட்டில் மழை பெய்து வருவதால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மழை நின்றவுடன் போட்டி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.