Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

T20 உலகக்கோப்பை போட்டி - பாகிஸ்தான் Vs ஆஸ்திரேலியா போட்டியை கண்டு ரசித்த எம்.எஸ்.தோனி போன்ற தோற்றம் கொண்ட நபர்!

09:37 PM Jun 07, 2024 IST | Web Editor
Advertisement

பாகிஸ்தான் vs USA அணிகள் மோதிய T20 உலகக் கோப்பை போட்டியை தோனியை போன்ற தோற்றம் கொண்ட நபர் கண்டுகளிக்கும் காட்சி இணையம் முழுவதும் பரவி வருகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் தோனி மாறுவேடத்தில் போட்டியை பார்த்துக் கொண்டிருந்ததாகக் கூறுகிறார்கள்.

Advertisement

டெக்சாஸில் உள்ள கிராண்ட் ப்ரேரி ஸ்டேடியத்தில் நடந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2024 போட்டியில் பாகிஸ்தானும் அமெரிக்காவும் விளையாடின. இந்த போட்டியில், பாகிஸ்தானை சூப்பா் ஓவரில் வீழ்த்தியது அமெரிக்கா. இதனால் பாகிஸ்தான் அணியை அந்த அணியின் ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கிடையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி போன்ற உருவம் கொண்ட நபர் பாகிஸ்தான் - அமெரிக்கா இடையிலான போட்டியை கண்டு ரசித்தது குறித்த பதிவுகளும் வைரலாஇ வருகிறது.

எம்எஸ் தோனியின் தோற்றம் கொண்ட நபர் நீளமான தாடியுடன், வெள்ளை நிற தலைக்கவசம் மற்றும் வெள்ளை குர்தா அணிந்து போட்டியை காணுவது படம் காட்டுகிறது. ஒரு பயனர் டெக்சாஸில் உள்ள ஸ்டேடியத்தில் இருந்து டாப்பல்கேங்கரின் இந்த புன்னகை படத்தை வெளியிட்டார்.

Tags :
cricket fansincognito modeMS Dhoninews7 tamilNews7 Tamil UpdatesPak vs USAT20 World CupT20 World Cup 2024Texas
Advertisement
Next Article