டி20 உலகக் கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை!
07:40 AM Jun 09, 2024 IST
|
Web Editor
பாகிஸ்தான் அணி சார்பில் பாபர் ஆசம் (கேப்டன்), ஆசம் கான், பகர் ஜமான், இப்திகார், ரிஸ்வான், சயிம் அயுப், உஸ்மான் கான், இமாத் வாசிம், ஷதாப் கான், அப்பாஸ் அப்ரிதி, அப்ரார் அகமது, நசீம் ஷா, ஷாகீன் ஷா அப்ரிதி ஆகியோர் விளையாடவுள்ளனர். இந்த இரு அணிகளும் டி20 ஆட்டங்களில் 12 முறை மோதியுள்ள நிலையில் இந்தியா 8 முறையும், பாகிஸ்தான் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டையில் முடிவடைந்தது. இரு அணிகளும் இடம் பெற்றுள்ள குரூப் ஏ பிரிவில் அமெரிக்க அணி 2 வெற்றிகளுடன் முதலிடத்திலும், இந்திய அணி ஒரு வெற்றியுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.
Advertisement
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 16வது லீக் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.
Advertisement
9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 15 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்த நிலையில், 16வது லீக் போட்டியில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தும் இந்தியா – பாகிஸ்தான் மோதல் இன்று நடக்கிறது.
இந்த போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் விராட் கோலி, ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, பும்ரா, முகமது சிராஜ், ஜடேஜா என்று அனைத்து முன்னணி வீரர்களும் இன்றைய போட்டியில் இருப்பதால் வலுவாக காணப்படுகிறது.
Next Article