டி20 உலகக் கோப்பை முதல் போட்டி - கனடா அணி பேட்டிங்!
டி20 உலகக் கோப்பை முதல் போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
டி20 உலகக் கோப்பை இன்று முதல் 29-ம் தேதி வரையில் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா உட்பட 20 அணிகள் பங்கேற்கிறது. இதில் மொத்தம் 55 போட்டிகள் நடைபெறவுள்ளது. குரூப் சுற்று, சூப்பர் 8 சுற்று, நாக் அவுட் என போட்டிகள் நடைபெற உள்ளது. இந்திய அணி ‘குரூப்-ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதே பிரிவில் பாகிஸ்தான் அணியும் அங்கம் வகிக்கிறது.
இதற்காக சில நாட்களுக்கு முன்பு இந்திய அணி வீரர்கள் அமெரிக்கா புறப்பட்டு சென்றனர். இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய அணியின் புதிய ஜெர்சியை அடிடாஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்தது. இதனிடையே டி20 உலகக் கோப்பையில் பங்குபெற அமெரிக்க சென்ற இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்ட படங்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகின.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட்களை இழந்து 182 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணி 20ஓவர்களின் முடிவில் 9விக்கெட்களை இழந்து 122ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.