Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: தென்னாப்பிரிக்க அணிக்கு 177 ரன்கள் இலக்காக நிர்ணயித்த இந்திய அணி!

09:53 PM Jun 29, 2024 IST | Web Editor
Advertisement

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் விராட் கோலி மற்றும் அக்சர் படேலின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 176 ரன்கள் குவித்துள்ளது. தென்னாப்பிரிக்க அணிக்கு 177 இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

Advertisement

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இறுதிப்போட்டி பார்படாஸின் பிரிட்ஜ்டவுன் நகரில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலி களமிறங்கினர். பின்னர், கேசவ் மகாராஜ் வீசிய 2வது ஓவரின் 4வது பந்தில் ரோகித் ஷர்மா 9 ரன்கள் எடுத்திருந்தபோது கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதே ஓவரின் கடைசி ஓவரில் ரிஷப் பந்த் டக் அவுட்டானார். தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் 4வது ஓவரில் ரபாடா பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

அதனை தொடர்ந்து முன்கூட்டியே களமிறங்கிய ஆல்ரவுண்டர் அக்சர் படேல், விராட் கோலியுடன் கைகோத்து நிதானமாக ஆடினார். விராட் கோலி ஒருபக்கம் நிதானம் காட்ட மறுபக்கம் அக்சர் படேல் அதிரடியாக ஆடி இந்திய அணியை இருவரும் சரிவிலிருந்து மீட்டனர். இந்த நிலையில் 13.3 ஓவரில் 31 பந்துகளை சந்தித்து 47 ரன்கள் எடுத்திருந்த அக்சர் படேல் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார்.

தொடர்ந்து களமிறங்கிய சிவம் துபேவும் கோலியுடன் இணைந்து ஆடினார். விராட் கோலி 48 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். அதன்பின்னர் அதிரடியாக ஆட ஆரம்பித்தார் கோலி. அவர் 59 ரன்களில் 76 ரன்கள் எடுத்திருந்தபோது ஜான்சன் பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் சிவம் துபே 16 பந்துகளில் 27 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்துள்ளது. இதன்வாயிலாக, தென்னாப்பிரிக்க அணிக்கு 177 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tags :
FinalsIND v SAIND v SA 2024IND vs SA 2024IND vs SA FinalIndiaNews7Tamilnews7TamilUpdatesSouth AfricaT20 World CupVirat kohli
Advertisement
Next Article