Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டி20 உலகக்கோப்பை: பப்புவா நியூ கினியாவை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது ஆப்கானிஸ்தான்!

01:55 PM Jun 14, 2024 IST | Web Editor
Advertisement

டி20 உலகக்கோப்பையில் பப்புவா நியூ கினியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

Advertisement

9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.  இந்த தொடரில் டிரினிடாடில் இன்று நடைபெற்ற 29வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - பப்புவா நியூ கினியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய பப்புவா நியூ கினியா அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 95 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.  அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக கிப்ளின் டோரிகா 27 ரன்களும், டோனி உரா 11 ரன்களும் எடுத்தனர். ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் ஃபசல்ஹக் பரூக்கி 4 விக்கெட்களையும்,  நவீன்-உல்-ஹக் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இதையடுத்து 96 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 15.1 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 101 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  ஆப்கானிஸ்தான் தரப்பில் குல்பைதீன் நைப் 49 ரன்கள் எடுத்தார்.  இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

Tags :
afghanistanPapua New GuineaSuper8 RoundT20 World Cup
Advertisement
Next Article