Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஸ்வீட்.. காரம்.. GST வீடியோ வைரல் - கேள்வி கேட்ட ஹோட்டல் உரிமையாளர் #FinanceMinister நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்புக் கோரி விளக்கம்!

07:28 AM Sep 13, 2024 IST | Web Editor
Advertisement

ஜிஎஸ்டி குறித்த நகைச்சுவையாக கேள்வி கேட்ட அன்னபூர்னா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் அதுகுறித்து விளக்கம் அளித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்புக் கோரினார்.

Advertisement

கோவை மாவட்டம் கொடிசியா வளாகத்தில் கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளின் கோரிக்கைகளை டெல்லியில் இருந்து வந்திருந்த வருமான
வரி துறை, ஜி.எஸ்.டி , கஸ்டம்ஸ் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளிடம் மனுவாக அளிக்கு நிகழ்ச்சியை கொடிசியா தொழில் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் அனைத்து நிர்வாகிகளும் தங்களது கோரிக்கையை மனுவாக அளித்தனர்.

இதனைதொடர்ந்து கொடிசியா வளாகத்தில் இன்று மாலை சிறு,குறு தொழில் முனைவோர் , பஞ்சாலை உரிமையாளர்கள், விவசாயிகள், வணிகர்கள் ஆகியோருடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கலந்துரையாடினார். இதில் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து அனைத்து துறைகளை சேர்ந்த தொழில் முனைவோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசனும் பங்கேற்றார்.

இந்த நிகழ்வில் பேசிய தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் சீனிவாசன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பேசியதாவது..

உணவகங்களில் விற்கப்படும் இனிப்பு வகைகளுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. ஆனால் காரம் வகைகளுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. ஒருவர் இனிப்பு காரம் இரண்டுமே வாங்கும்போது ஜிஎஸ்டி வரி மாறி மாறி வருவதால் கம்பியூட்டரே திணறி வருகிறது.

உங்கள் கட்சியின் எம் எல் ஏ வானதி சீனிவாசன் எங்களின் தினசரி வாடிக்கையாளர். ஒரே கிச்சன், ஒரே கடலை மாவு, ஒரே மாஸ்டர் என இருக்கும் போது இனிப்புக்கும் காரத்திற்கும் ஜி எஸ் டி மாறுபாடாக இருப்பதால் கடும் கஷ்டமாக இருக்கிறது எனவே அதனை ஒரே மாதிரியாக்க வேண்டும். வடமாநிலங்களில் ஸ்வீட் அதிகம் சாப்பிடுவதால் அதற்கு 5சதவிகிதம் வரி, காரம் குறைவாக சாப்பிடுவதால் 12 சதவீதம் வரி என எங்களது தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனே கூறுகிறார். நாங்கள் என்ன செய்வது? இதனை மாற்றினால் நன்றாக இருக்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர் சங்கத் தலைவரான சீனிவாசன் நகைச்சுவையாக பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

ஜிஎஸ்டி குறித்து கேள்வி கேட்ட வீடியோ வைரலான நிலையில் கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நேரில் மன்னிப்பு கோரினார். மேலும் 'நான் எந்தக் கட்சியிலும் இல்லை, தயவுசெய்து மன்னித்துக் கொள்ளுங்கள்' என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து GST பற்றிய எந்த விமர்சனத்திற்கும் பதில் அளிப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன். ஆனால் ஒரு வாடிக்கையாளர் என்ன சாப்பிடுகிறார் என்பதை பொதுவெளியில் எப்படி பேசலாம்? என அன்னபூர்ணா உரிமையாளருக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுரை வழங்கினார்.

Tags :
Annapurna HotelCoimbatorehotel associationNirmala sitharaman
Advertisement
Next Article