புதிய அமைச்சர்களுக்கு இன்று பிற்பகல் பதவிப் பிரமாணம் - ஆளுநர் #RNRavi செய்துவைக்கிறார்!
புதிய அமைச்சர்களுக்கு இன்று பிற்பகல் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சராகவும் மற்றும் தற்போதுள்ள இலாகாக்களுடன் கூடுதலாக திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறையை ஒதுக்குமாறு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்திருந்தார். மேலும் வி.செந்தில்பாலாஜி, கோவி செழியன், ஆர்.ராஜேந்திரன், எஸ்.எம்.நாசர் ஆகியோரை புதிதாக அமைச்சர்களாக நியமிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்திருந்தார்.
இந்தப் பரிந்துரைகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களின் பதவியேற்பு விழா 29.9.2024, ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு சென்னை ராஜ்பவனில் நடைபெறும்.
மேலும், பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் டி.மனோ தங்கராஜ், சிறுபான்மையினர் நலம் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கே. ராமச்சந்திரன், ஆகியோரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்ததற்கும், ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளதால் அவர்கள் விடுக்கப்பட்டுள்ளனர்.