Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சுசீந்திரம் தாணுமாலய கோயில் மார்கழி பெருந்திருவிழா தேரோட்டம் - ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

12:18 PM Dec 26, 2023 IST | Web Editor
Advertisement

மார்கழி பெருந்திருவிழாவை முன்னிட்டு சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்டம் நடைபெற்றது. 

Advertisement

தென்மாவட்டங்களில் புகழ்பெற்ற ஆலயங்களில் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி
கோயிலும் ஒன்று.  இந்த கோயிலின் மார்கழி பெருந்திருவிழா கடந்த டிச.18-ம் தேதி
கொடியேற்றத்துடன் துவங்கியது.  இதனைத் தொடர்ந்து திருவிழாவின் ஒவ்வொரு நாட்களின் போதும் சுவாமி வீதி உலா,  மெல்லிசை,  இன்னிசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதையும் படியுங்கள்: TNPSC குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு… 2-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு எப்போது? 

 

இந்த நிலையில் 9-வது திருவிழாவான இன்று (டிச.26) தேரோட்டம் நடைபெற்றது.  இதனை ஒட்டி சுவாமி,  அம்பாள்,  விநாயகர் தேர்களை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.  தேரோட்ட நிகழ்ச்சியில் கேரள மாநிலத்தில் இருந்தும் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  இதனை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று (டிச.26) உள்ளூர் விடுமுறை விடப்பட்டது.

Tags :
devoteesKanyakumarinews7 tamilNews7 Tamil UpdatesSuchindram Thanumalayam TempleTherottam
Advertisement
Next Article