Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

'Leading Light' ஆவணப்படத்திற்காக விருது வென்றார் #Surya-வின் மகள் தியா!

09:35 PM Oct 02, 2024 IST | Web Editor
Advertisement

சூர்யாவின் மகள் தியா ஆவணப்படத்தை இயக்கி விருது பெற்றுள்ளார்.

Advertisement

நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகாவுக்கு கடந்த 2006ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு தியா (17) எனும் மகளும் தேவ் (14) எனும் மகனும் உள்ளனர். இதில் தியா மும்பையில் படித்து வருகிறார். அவர் தனது பெற்றோரர்களை போலவே சினிமாவில் நுழைய தயாராகி வருகிறார் என தெரிகிறது. சமீபத்தில் மாணவர்களுக்கான குறும்பட போட்டி நடைபெற்றது.

'த்ரிலோகா' இன்டர்நேஷனல் பிலிம்ஃபேர் விருதுகள் நடத்திய போட்டியில், 'லீடிங் லைட்' (Leading Light) என்ற ஆவணப்படத்தினை எழுதி, இயக்கினார் தியா. இந்த ஆணவப்படம் திரைக்கு பின்னால் இருக்கும் பெண்களின் கதைகளை பேசும் படம் என கூறப்படுகிறது. இந்த ஆவணப்படத்திற்காக சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த படத்தினை இயக்கியதற்காக விருதை வென்றுள்ளார் தியா. தியா வெற்றி பெற்றதை நடிகை ஜோதிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார்.

இது குறித்து ஜோதிகா தனது பதிவில் கூறியதாவது,

"சினிமா துறையில் ஒளிப்பதிவு தொடர்பான வேலைகளில் ஈடுபடும் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை ஆவணப்படமாக எடுத்ததுக்கு பெருமைப்படுகிறேன் தியா. இதேபோன்று தொடர்ந்து செயல்பட வேண்டும். ஒளிப்பதிவு தொடர்பான வேலைகளில் ஈடுபடும் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை வெளிகொண்டு வந்ததற்கு மிக்க நன்றி"

இவ்வாறு நடிகை ஜோதிகா பதிவிட்டுள்ளார்.

Tags :
awardDiya SuryadocumentaryJyotikaLeading Lightnews7 tamilSurya
Advertisement
Next Article