Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

'பீனிக்ஸ்' திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகும் விஜய்சேதுபதி மகன்!

01:57 PM Nov 24, 2023 IST | Web Editor
Advertisement

நடிகர் விஜய்சேதுபதியின் மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகும் 'பீனிக்ஸ்' திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக இருக்கும் விஜய் சேதுபதி, ஷாரூக்கானுடன் 'ஜவான்' படத்தில் நடித்து இந்தி திரையுலகிலும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். தற்போது விஜய்சேதுபதியின் மகன் சூர்யாவும் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார்.

இவர் ஏற்கனவே நானும் ரவுடிதான், சிந்துபாத் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். மேலும் வெற்றிமாறனின் விடுதலை படத்தின் 2ம் பாகத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகும் படத்திற்கு 'பீனிக்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. சண்டை இயக்குநர் அனல் அரசு இயக்குநராக அறிமுகமாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.

மேலும், பிரேவ் மேன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ராஜலட்சுமி அரசகுமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பூஜை சென்னை ஏ.வி.எம். ஸ்டூடியோவில் இன்று நடைபெற்றது.

Tags :
heromoviePhoenix VeehaanSuryaVijay sethupathi
Advertisement
Next Article