Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாலிவுட்டில் கால்பதிக்கும் #Surya!

05:39 PM Oct 05, 2024 IST | Web Editor
Advertisement

இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க உள்ளதன் மூலம், அவர் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார்.

Advertisement

பிரபல இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கங்குவா திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்தப் படம் 3டி முறையில் ஒரு சரித்திர படமாக உருவாகியுள்ளது.

‘கங்குவா’ திரைப்படம் 10 மொழிகளில் வெளியாக உள்ள நிலையில் படப்பிடிப்பு நிறைவடைந்தது. ‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன் 44-வது படத்தில் சூர்யா நடித்து வருகிறார்.

இந்த நிலையில், அடுத்ததாக நடிகர் சூர்யா இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் இயக்கத்தில் பாலிவுட் படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழா (ஐஐஎப்ஏ) நிகழ்ச்சியில் இயக்குனர் ராகேசிடம் சூர்யாவின் அடுத்த படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த இயக்குனர் ராகேஷ், "100 சதவிகிதம்" எனக் குறிப்பிட்டுள்ளார். 'கர்ணா' என்ற பெயரில் உருவாகும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் ராகேஷ் 'பாக் மில்கா பாக்', 'தூபான்' போன்ற விளையாட்டு ரீதியான படங்கள் எடுத்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
actor suryabollywoodCinamaKanguvamovie updatenews7 tamilSurya
Advertisement
Next Article