Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சூர்யா 46 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

நடிகர் சூர்யாவின் 46 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
12:34 PM Jun 11, 2025 IST | Web Editor
நடிகர் சூர்யாவின் 46 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
Advertisement

நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனிடையே ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. இப்படம் சூர்யாவின் 45வது படமாக உருவாக உள்ளது. அதைத் தொடர்ந்து சூர்யாவின் 46வது படத்தை வாத்தி, லக்கி பாஸ்கர் பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்குவதாக அறிவிப்பு வெளியானது.

Advertisement

சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அண்மையில் மமிதா பைஜு  இணைந்தார். அவர்களுடன் இணைந்து ராதிகா சரத்குமார் இப்படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படட்தின் படக்குழு பழனி முருகன் கோயிலில் வழிபட்டது. அத்துடன் இப்படம் தொடர்பான அப்டேட்டுகள் விரைவில் வரும் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இப்படத்தில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இது தொடர்பாக படக்குழு போஸ்டரை வெளியிட்டு, இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியிருப்பதாக தெரிவித்துள்ளது.

Tags :
Mamitha BaijuPalaniSuriyaSuriya 46Venky Atluri
Advertisement
Next Article