Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நெல்லையில் மழை, வெள்ள சேதம் குறித்த கணக்கெடுப்பு தொடக்கம் - உரிய ஆவணங்கள் இல்லாத மக்கள் என்ன செய்ய வேண்டும்?

01:44 PM Dec 20, 2023 IST | Jeni
Advertisement

திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதங்கள் குறித்த கணக்கெடுப்பு பணி, கிராமங்கள் வாரியாக தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தகவல் தெரிவித்துள்ளார்.

Advertisement

தூத்துக்குடி,  திருநெல்வேலி,  தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.  பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.  தொடர்ந்து தென் மாவட்டங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதங்கள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களால் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியுள்ளதாக அந்த மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தகவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :

“பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதங்கள் குறித்த விபரங்களை கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும்,  ஆதார் எண் மற்றும் தங்கள் உரிய விபரங்களை அளிக்க வேண்டும்.  தேவையான ஆவணங்கள் இல்லாத பொதுமக்கள் புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப் மூலம் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஊராட்சி செயலாளரிடம் தெரிவிக்கலாம்.  அரசின் கணக்கெடுப்பு பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்”

இவ்வாறு நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Tags :
censusDamageDocumentsfloodsNellai
Advertisement
Next Article