Bike-டேங்க் கவரில் இருந்து சர்பிரைஸ் எண்ட்ரி கொடுத்த விஷப் பாம்பு!
இரு சக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் கவரில் பதுங்கி இருந்து கொம்பேறிமூக்கன் பாம்பு சர்பிரைஸ் ஆக வெளியே வந்ததால் அதிர்ச்சியடைந்தனர்.
கோவை மாவட்டம் ஆலந்துறை அடுத்துள்ள புதூரில் ஸ்ரீ ஹரி என்ற இருசக்கர வாகன பழுது பார்க்கும் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு இன்று காலை போளுவாம்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி முனி ராஜ் என்பவரின் இருசக்கர வாகனம் இயங்காததால் பழுது பார்க்க சென்றுள்ளார். அப்போது அந்த வாகனத்தை அருகில் உள்ள ஸ்ரீ ஹரி என்ற இருசக்கர வாகன பழுது பார்க்கும் நிலையம் பழுது நீக்கக் கூறி நிறுத்தி உள்ளார்.
இதனைத் தொடர்ந்து வாகனத்தைப் பழுதுபார்த்து பின்னர் இயங்கச் செய்த ஊழியர் அந்த வாகன அதிர்வின் போது பெட்ரோல் டேங்க் கவரில் இருந்த கொம்பேறிமூக்கன் பாம்பு பதுங்கி இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போது வளைந்து நெளிந்து தலையை வெளியே நீட்டி எட்டிப் பார்த்த கொம்பேறிமூக்கன் பாம்பை அருகிலிருந்த பொதுமக்களின் உதவியுடன் பிடித்து அருகே உள்ள வனப் பகுதியில் விடுவித்தனர்.
சமீபகாலமாக இருசக்கர வாகனம், ஹெல்மட், காலணி உள்ளிட்டவற்றில் பாம்பு இருக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் கவனமாக இருக்கும்படியும், அதன்மூலம் விபரீதத்தை தவிர்க்கலாம் எனவும் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.