Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் வெளியேற்றம்… மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

07:04 AM Nov 30, 2023 IST | Web Editor
Advertisement

கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23 அடியை நெருங்கியுள்ள நிலையில், ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 2 ஆயிரத்து 566 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

தொடர்மழையால் சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் கணிசமான நீர்வரத்து இருந்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய ஏரியாக உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு இன்றைய தினத்தில் (31-11-2023) 2,888 கன அடியில் இருந்து 3,098 கன அடியாக அதிகரித்துள்ளது.

3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு உடைய செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பின் அளவு 3,256 மில்லியன் கன அடியாக இருந்து வருகிறது. 24 அடி உயரம் கொண்ட ஏரியில் தற்போது 22.53 அடி வரை தண்ணீர் இருப்பு உள்ளது.

இதனால் ஏரியின் பாதுகாப்பு கருதி நேற்று முன் தினம் (28-11-2023) முதற்கட்டமாக சுமார் 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று (29-11-2023) காலை முதற்கட்டமாக 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக 1500 கன அடியாக அதிகரிக்கப்பட்டு இருந்தது.

செம்பரம்பாக்கம் ஏரி முழுக்கொள்ளளவை நோக்கி வேகமாக நிரம்பி வருவதால், அடையாறு ஆற்றின் கரையோர பகுதிகளான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை, அடையாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement
Next Article