Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஓடிடியில் வெளியானது சூர்யாவின் #Kanguva!

04:38 PM Dec 08, 2024 IST | Web Editor
Advertisement

சூர்யா நடிப்பில் உருவான கங்குவா திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

Advertisement

சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ‘கங்குவா’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த நவ.14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.  ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கங்குவா பெரிய வசூல் சாதனை செய்யும் என படக்குழு எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நெகட்டிவ் விமர்சனங்களால் படம் வசூலில் அடி வாங்கியது. இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்தது.

ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் இதுவரை ரூ.180 கோடிக்கும் குறைவாகவே வசூலித்திருப்பதாகத் தெரிகிறது. இந்தியளவில் ரூ. 100 கோடியையும், வெளிநாடுகளில் ரூ.80 கோடி வரை வசூலித்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. படம் வெளியாகி இன்னும் ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

Advertisement
Next Article