Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாலிவுட்டில் கால் பதிக்கும் சூர்யா...? - லேட்டஸ்ட் அப்டேட்...!

08:12 PM Feb 03, 2024 IST | Web Editor
Advertisement

ராகேஷ் ஓம்பிரகாஷ் இயக்கத்தில்தான் சூர்யா பாலிவுட் படத்தில் நேரடியாக களமிறங்கவுள்ளார்.

Advertisement

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து முடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'.படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவு செய்யப்பட்டு தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தப் படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா இணையவுள்ள படம் சூர்யா 43. இந்தப் படத்திற்கு தற்போது புறநானூறு என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தலைப்பு தற்காலிகமாகத்தான் வைக்கப்பட்டுள்ளதாகவும் டைட்டிலில் மாற்றம் ஏற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அடுத்தடுத்து சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவரும் சூர்யா அடுத்ததாக பாலிவுட் படத்தில் கமிட்டாகியுள்ளார்.

ராகேஷ் ஓம்பிரகாஷ் இயக்கத்தில்தான் சூர்யா பாலிவுட் படத்தில் நேரடியாக களமிறங்கவுள்ளார். மிக அதிகமான பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ள இந்தப் படம் பான் இந்தியா படமாக உருவாகவுள்ளது. மகாபாரத கால கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாகவுள்ள இந்தப் படத்தில் கர்ணன் கேரக்டரில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்தின் ப்ரீ புரொடக்ஷன்ஸ் வேலைகள் நிறைவடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடி சேரவுள்ள நடிகை குறித்தும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement
Next Article