பழனி முருகன் கோயிலில் இன்று சூரசம்ஹாரம்!
பழனி முருகன் கோயிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு இன்று மாலை மலையடிவாரத்தில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
பழனி முருகன் கோயிலில் விமர்சையாக நடைபெறக்கூடிய விழாகளில் ஒன்றான கந்தசஷ்டி விழா கடந்த திங்கட்கிழமை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு மேல் மலையடிவாரத்தில் நடைபெற உள்ளது.
இதையும் படியுங்கள்: சென்னை சென்ட்ரல் -அரக்கோணம் மார்க்கத்தில் 94 மின்சார ரயில்கள் ரத்து!
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பக்தர்கள் மலை மீது செல்ல காலை 11 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மலைக் கோயிலில் உச்சிகால பூஜைக்கு பிறகு தொடர்ச்சியாக சாயரட்ச பூஜைகள் முடிவடைந்து சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதனைத் தொடர்ந்து பராசக்தி வேல் மலையடிவாரத்திற்கு எடுத்து வரப்பட்டு நான்கு கிரிவலபபாதையில் சூரன்களை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த நிலையில் கந்த சஷ்டி விழாவில் கலந்து கலந்துகொண்டு முருகனை தரிசனம்
செய்வதற்காக காலை முதலே ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வருகை தந்துள்ளனர்.
படிப்பாதை வழியாக பக்தர்கள் மலை மீது சென்று முருகனை தரிசனம் செய்து
வருகின்றனர். பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம்
ஏற்பாடுகளை செய்துள்ளது.