#SupremeCourt புதிய தலைமை நீதிபதியாகிறார் சஞ்சீவ் கன்னா | யார் இவர்?
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக பரிந்துரை செய்யப்பட்டுள்ள சஞ்சீவ் கன்னா பற்றி தற்போது பார்க்கலாம்...
உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவி வகித்து வருகிறார். உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதவியேற்றுக் கொண்டார். அவரது பதவிக்காலம் வரும் நவம்பர் 10ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து, உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பெயரை தற்போதைய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பரிந்துரை செய்துள்ளார். இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், உச்ச நீதிமன்றத்தின் 51-வது நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பொறுப்பேற்பார்.
யார் இந்த சஞ்சீவ் கன்னா?
- 1960ம் ஆண்டு டெல்லியில் பிறந்தவர் சஞ்சீவ் கன்னா
- டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர்.
- இவரது தந்தை டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக 1985ம் ஆண்டு வரை பதவி வகித்தார்.
- இவரது தாயார் இந்தி பேராசிரியராக டெல்லி ஸ்ரீராம் கல்லூரியில் பணியாற்றினார்.
- 1983ம் ஆண்டு டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்ட சஞ்சீவ் கன்னா மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார்.
இதையும் படியுங்கள் : நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு?… உறுதியான ஆதாரம் தனது அரசிடம் இல்லை -கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!
- வருமான வரித் துறையின் முதுநிலை ஆலோசகராக நீண்ட காலம் பணியாற்றிய சஞ்சீவ் கன்னா, 2004ம் ஆண்டு டெல்லி அரசின் வழக்கறிஞரானார்.
- டெல்லி உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியான சஞ்சீவ் கன்னா, அடுத்தாண்டே நிரந்தர நீதிபதியாக நியமிகப்பட்டார்.
- கடந்த 2019ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
- இதையடுத்து, உச்சநீதிமன்றத்தின் சட்ட சேவைக் குழுவின் தலைவராக 2023ம் ஆண்டில் நியமிக்கப்பட்டார்.
- தற்போது தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவராகவும், போபாலில் உள்ள தேசிய நீதித்துறை அகாடமியின் ஆலோசகராகவும் உள்ளார்.