Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பஹல்காம் தாக்குதல் வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு - மனு தள்ளுபடி!

பஹல்காம் தாக்குதல் தொடர்பான வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு...
01:56 PM May 01, 2025 IST | Web Editor
Advertisement

காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க கோரிய பொதுநல மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தற்போதைய நிலையில் இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று தெரிவித்தனர்.

Advertisement

மேலும் விசாரணை அமைப்புகளுக்கு மன சோர்வை ஏற்படுத்தும் வகையில் மனு உள்ளது என்று கூறி மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வெளி மாநிலங்களில் உள்ள ஜம்மு - காஷ்மீர் மாணவர்கள் பாதுகாப்பு தொடர்பான பிரச்னை இருந்தால் உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என்று உத்தரவிட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தற்போதைய நிலையில் இந்த மனுவை விசாரிக்க முடியாது. மத்திய அரசு விசாரணை செய்து வருகிறது. அப்படி இருக்கும்போது, அனைவரும் தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைந்து இருக்க வேண்டும். நாட்டின் மீதான பொறுப்பு உங்களுக்கும் உள்ளது என, பொறுப்பற்ற பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளதாக மனுதாரர் ஃபதேஷ் சாஹுவுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

Tags :
judicial probePahalgam AttackPILSupreme court
Advertisement
Next Article