Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

முதுகலை நீட் தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!

நீட் முதுகலை தேர்வு ஒரே ஷிப்டில் நடத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
04:32 PM May 30, 2025 IST | Web Editor
நீட் முதுகலை தேர்வு ஒரே ஷிப்டில் நடத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement

நீட் முதுகலை தேர்வு இரண்டு ஷிஃப்டுகளாக நடத்தப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில்,

Advertisement

நீதிபதிகள் :-

நீட் முதுகலை தேர்வுகள் ஏன் இரண்டு ஷிப்டுகளாக நடத்தப்படுகிறது?.

மருத்துவ தேர்வுகளுக்கான தேசிய வாரியம்:-

முறைகேடுகளை தவிர்க்கவே இரண்டு ஷிஃப்டுகளாக தேர்வு நடத்தப்படுகிறது.  ஆண்டுதோறும் தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. எனவே இரண்டு ஷிஃப்டுகளாக தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 15ஆம் தேதி தேர்வு நடத்தப்படுகிறது. தடை விதிக்கப்பட்டால் பாதிப்பை ஏற்படுத்தும்.

நீதிபதிகள்:-

நீட் முதுகலை தேர்வு ஏன் கைப்பட எழுதும் வகையில் நடத்தப்படுவதில்லை?. நீட் முதுகலை தேர்வை ஒரே ஷிஃப்டில் நடத்த ஏன் வழிமுறை காணக்கூடாது?. நீட் முதுகலை தேர்வை ஒரே ஷிஃப்டில் நடத்த வழிகாணுங்கள். பல்வேறு சிரமங்களுக்கிடையே ஏராளமான மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். அவர்களுக்கு இந்த 2 ஷிப்ட் தேர்வு கூடுதல் பிரச்சனையை உருவாக்கும். என தெரிவித்தனர்.

வாதங்களை தொடர்ந்து, நீட் முதுகலை தேர்வு ஒரே ஷிப்டில் நடத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் கூடுதல் தேர்வு மையங்களை கண்டறிந்து நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டாக நடத்த வேண்டும் என உத்தரவிட்டனர். ஜூன் 15-ம் தேதிக்குள் கூடுதல் தேர்வு மையங்களை கண்டறிய முடியாவிட்டால் மீண்டும் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் உத்தரவு.

Tags :
examNEET-PG 2025single shiftstudentsSupreme court
Advertisement
Next Article