Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரிலான விருதை பயன்படுத்த பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு இடைக்காலத் தடை - உச்ச நீதிமன்றம் உத்தரவு!

07:07 PM Dec 16, 2024 IST | Web Editor
Advertisement

சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதை பயன்படுத்த, பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

2024ஆம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை, மறைந்த பிரபல பின்னணி பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில், பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து எம்.எஸ். சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், எஸ்.வி.என்.பட் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது எம்.எஸ். சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் தரப்பில்,

“சங்கீத கலாநிதி விருதை டிஎம். கிருஷ்ணாவுக்கு வழங்கியிருப்பது நீதிமன்ற அவமதிப்பு. ஏனெனில் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சங்கீத கலாநிதி விருதை டி.எம் கிருஷ்ணாவுக்கு மியூசிக் அகாடமி வழங்கியிருக்கக் கூடாது. இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் வரை சங்கீத கலாநிதி விருதை டி.எம் கிருஷ்ணா பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது.

இதனைக் கேட்ட நீதிபதிகள்,

“இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டியுள்ள விஷயங்களை பார்த்தோம். மேலும் இந்த விருது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போது, விருதை தற்போது வழங்க மாட்டோம் என நீதிமன்றத்தில் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அதனை மியூசிக் அகடமி செய்யவில்லை. மேலும் விருதை பெறும் நபர் தகுதியானவரா என்பதை மட்டுமே இந்த நீதிமன்றம் பார்க்கிறது.

எம்.எஸ். சுப்புலட்சுமியை அவமதித்த நபர், அவர் பெயரில் விருதை பெறுகிறாரா என்பதை மட்டுமே இந்த நீதிமன்றம் கருத்தில் கொள்கிறது. எனவே இந்த விவகாரத்தில் ஒரு முடிவு எட்டும் வரை விருதிற்கு முன்பு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது என்பதை பயன்படுத்த ஏன் தடை விதிக்கக்கூடாது? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு டி.எம்.கிருஷ்ணா தரப்பில், “ஏற்கனவே இந்த வழக்கில் டி.எம்.கிருஷ்ணா கருத்துக்கும், இந்த விருதிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என உயர்நீதிமன்ற தனி நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும் தற்போதைய வழக்கில், வழங்கப்பட்ட விருதுக்கு தடை கோரவில்லை. எனவே தடை விதிக்கக்கூடாது. பிரபல பாடகியான சுப்புலட்சுமி என்பவரை ஒருவர் சொந்தம் கொண்டாட முடியாது. அவர் அனைவருக்குமானவர். அவர் மீது அதிக மரியாதை உண்டு.

இந்த விவகாரத்தில் வார்த்தைகளின் அர்த்தம் தவறாக புரிந்து கொண்டிருக்கலாமே தவிர, சுப்புலட்சுமி அவமானபடுத்தப்படவில்லை” என தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்ட நீதிபதிகள், “இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை டி.எம்.கிருஷ்ணா சங்கீத கலாநிதி விருதை பயன்படுத்த தடை விதித்தும், மனுவுக்கு டி.எம்.கிருஷ்ணா மற்றும் மெட்ராஸ் மியூசிக் அகாடமி பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும் மறு உத்தரவு வரும் வரை டி.எம்.கிருஷ்ணா தன்னை சங்கீத கலாநிதி சுப்புலட்சுமி விருது பெற்றவர் என்று பிரகடனப்படுத்தவும் கூடாது என உத்தரவிட்டனர்.

Tags :
MS Subbulakshmi AwardMusic AcademySupreme courtTM Krishna
Advertisement
Next Article