Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நெட் ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் உள்ளிட்ட பல ஓடிடி தளங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

வரம்பு மீறிய ஆபாச காட்சிகளை கட்டுப்படுத்த கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில், நெட் ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் உள்ளிட்ட பல ஓடிடி தளங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
04:05 PM Apr 28, 2025 IST | Web Editor
Advertisement

நெட் ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் உள்ளிட்ட பல்வேறு ஓடிடி தளங்களில் வரம்பு மீறிய ஆபாச காட்சிகள் இடம்பெறுவதாகவும் அதற்கான கட்டுப்பாடுகளை உருவாக்க வேண்டும் என்றும் பொதுநல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் ஏ.ஜி மாசி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று(ஏப்.28) விசாரணை நடைபெற்றது. அப்போது மனு தாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின், ஓடிடி தளங்கள் சமூக வலைத்தளங்களில் கட்டுப்பாடின்றி செயல்படுவதை சுட்டிக்காட்டினார்.

இந்த வழக்கில் மத்திய அரசை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வக்கிரமான காட்சிகள் இருப்பதாக சிலவற்றை காண்பித்து, தணிக்கை செய்ய முடியாது. ஆனால் ஓரளவு கட்டுப்பாடு விதிக்க முடியும் என்று கூறினார்.

தொடர்ந்து நீதிபதிகள், இது மத்திய அரசின் கொள்கைப் பிரிவுக்குட்பட்டது எனக் கூறி, Netflix, Amazon Prime, Alt Balaji, Ullu, ALTT, X , Meta Inc, Google, Mubi, Apple உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் விளக்கம் அளிக்க  கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Tags :
Amazon PrimeNetflixOTT PLATFORMSSupreme court
Advertisement
Next Article