சின்னத்திரை நடிகர் ராகுல் ரவிக்கு முன் ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம்!
தலைமறைவாக இருந்த சின்னத்திரை நடிகர் ராகுல் ரவிக்கு உச்சநீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது .
சின்னத்திரை மூலமாக பிரபலமாகி தற்போது வெள்ளித்திரையிலும் துணை நடிகராக இருப்பவர் ராகுல் ரவி. அதாவது தமிழில் முதல்முறையாக நந்தினி என்ற சீரியல் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானவர் ராகுல் ரவி. கேரளாவை சேர்ந்த இவர் ஆரம்ப காலத்தில் மாடலாக இருந்தவர். அதற்குப் பிறகு இவருக்கு கிடைத்த சின்னத்திரை வாய்ப்புகளால் மலையாளத்தில் வெளியான பொன்னம்பளி என்ற சீரியலில் முதல் முறையாக தனது சின்னத்திரை வாழ்க்கையை ஆரம்பித்தார். அதற்குப் பிறகு 2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் தமிழ் மற்றும் கன்னடம் என்ற இரண்டு மொழிகளில் ஒளிபரப்பான நந்தினி என்ற சீரியல் மூலமாக பெரும்பாலான ரசிகர்களை பெற்றார். இதற்கிடையே வெள்ளி திரையிலும் துணை நடிகர் கதாபாத்திரம் இவரை தேடி வந்தது அதிலும் நடித்து புகழ்பெற்றார்.
இப்படி தனது திரை வாழ்க்கையில் புகழை நோக்கி சென்று கொண்டிருந்த ராகுல் ரவிக்கு 2020இல் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் காதல் திருமணமாக கூறப்படுகிறது. ராகுல் ரவியின் மனைவி பெயர் லட்சுமி நாயர். திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் மகிழ்ச்சியாக இருந்த இந்த தம்பதி தற்போது ஒரு புதிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. அதாவது ராகுல் ரவியின் மனைவி லட்சுமி நாயர் தனது கணவர் மீது புகார் அளித்துள்ளார். அதுவும் அவர் இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் என்று குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இது குறித்த விசாரணையிலும் இறங்கினர். அதாவது ராகுல் ரவிக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பில் இருப்பது லட்சுமிக்கு அவரது நண்பர்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து லட்சுமி தனது கணவரிடம் இது குறித்து கேட்டுள்ளார் அதற்கு ராகுல் ரவி மனைவி லட்சுமியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
அதற்குப் பிறகே காவல்துறையினரை தனது வசிக்கும் இடத்திற்கு அழைத்து வந்து தனது கணவர் செய்யும் தவறுகளை வெளிச்சம் போட்டு காட்டினார் லட்சுமி நாயர். இதனை அடுத்து காவல்துறையினர் பதிவு செய்த எஃப் ஐ ஆர் ஐ நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது அதற்கு முன்பாகவே ராகுல் ரவி இவ்வழக்கில் இருந்து வெளிவதற்கு முன்ஜாமீன் கோரி இருந்தார். அந்த முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் ரத்து செய்யததை அடுத்து ராகுல் ரவி தலைமறைவானார். இருப்பினும் அவரைக் கண்டதும் பிடிக்க வேண்டும் என்ற வகையில் நீதிமன்றம் லுக் அவுட் நோட்டீசை அனுப்பது.
இந்நிலையுல், தலைமறைவாக இருந்தபடியே நடிகர் ராகுல் ரவி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ராகுல் ரவியின் முன்ஜாமின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.