பாபா ராம்தேவின் மன்னிப்பை ஏற்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு!
01:00 PM Apr 10, 2024 IST
|
Web Editor
Advertisement
நீதிமன்ற தீர்ப்பை வேண்டுமென்றே பாபா ராம்தேவ் மீறியுள்ளதால் எத்தனை முறை மன்னிப்புக் கேட்டாலும் ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிரபல யோகா குரு பாபா ராம்தேவியின் பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வரும் நிலையில், இந்த நிறுவனம் பல தவறான விளம்பரங்கள் வெளியிடுவதாக கூறி வழக்குத் தொடரப்பட்டது.
இவ்வழக்கில் பதஞ்சலி விளம்பரங்களில் தவறான தகவல்களை வெளியிடக் கூடாது என்று எச்சரித்த உச்ச நீதிமன்றம் இது குறித்து பதிலளிக்க அந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நிலையில், தனது மன்னிப்பை ஏற்கக் கோரி பாபா ராம்தேவ் புதிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்து, உச்ச நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.
Advertisement
பாபா ராம்தேவின் மன்னிப்பை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்திருந்த நிலையில், புதிய பிரமான பத்திரம் தாக்கல் செய்துள்ளார். நீதிமன்றத்திற்கு அளித்த உறுதிமொழியை மீறி தவறான மருத்துவ விளம்பரத்தை வெளியிட்டதற்காக தனது நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்குமாறு பாபா ராம்தேவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில், நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி பாபா ராம்தேவ் சமர்ப்பித்த 2-வது பிரமாணப் பத்திரத்தை நிராகரித்த உச்ச நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு எச்சரித்துள்ளது. மேலும், நீதிமன்ற தீர்ப்பை வேண்டுமென்றே பாபா ராம்தேவ் மீறியுள்ளதால் எத்தனை முறை மன்னிப்புக் கேட்டாலும் ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Next Article