Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சூப்பர் ஹிட் அடித்த மஞ்சும்மல் பாய்ஸ் OTTயில் ரிலீஸ் ஆகிறது- எப்போது தெரியுமா?

12:57 PM Apr 28, 2024 IST | Web Editor
Advertisement

சிதம்பரம் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்து சக்கைப்போடு போட்ட மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

மலையாள சினிமாவில் இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் உருவான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் உலகம் முழுவதும் 235 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது.

இதுவரை தமிழகத்தில் வெளியான மலையாள படங்களில் அதிக வசூல் சாதனை புரிந்த படம் என்ற பெருமையை மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் பெற்றது.இந்நிலையில் தற்போது மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அதன்படி இந்த படம் மே மாதம் 5-ம் தேதி தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. மேலும் இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
cinemaManjummel Boysmollywoodmovieott
Advertisement
Next Article