Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சூப்பர் 8 சுற்று: இந்தியா - வங்காளதேசம் இன்று பலபரீட்சை!

07:37 AM Jun 22, 2024 IST | Web Editor
Advertisement

டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் இந்தியா - வங்காளதேச அணிகள் இன்று மோதுகின்றன.

Advertisement

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 1ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்ற 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதின. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின. பாகிஸ்தான், இலங்கை மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட 12 அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின.

சூப்பர் 8 சுற்றில் அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் 1ல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேச அணிகளும் குரூப் 2ல் வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். சூப்பர் 8 சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறும்.

அந்த வகையில்,  ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேச அணிகள் மோதுகின்றன.  இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.  20 ஓவர் போட்டிகளில் இவ்விரு அணிகள் இதுவரை 13 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.  இதில் 12-ல் இந்தியாவும், ஒன்றில் வங்காளதேசமும் வெற்றி பெற்றுள்ளன.

இந்தியா:  ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப்சிங், குல்தீப் யாதவ்.

வங்காளதேசம்: தன்சித் ஹசன், லிட்டான் தாஸ், நஜ்முல் ஹூசைன் ஷன்டோ (கேப்டன்), ரிஷாப் ஹூசைன், தவ்ஹித் ஹிரிடாய், ஷகிப் அல்-ஹசன், மக்முதுல்லா, மெஹிதி ஹசன், தஸ்கின் அகமது, தன்சிம் ஹசன் சகிப், முஸ்தாபிஜூர் ரகுமான்.

Tags :
BAN vs BANCricketind vs banT20 World Cup
Advertisement
Next Article