Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ராஜஸ்தான் அணிக்கு 202 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி!

09:53 PM May 02, 2024 IST | Web Editor
Advertisement

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 202 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

Advertisement

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறதுஏற்கனவே 49 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில்,  ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்  அணி மற்றும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிக் கொண்டன.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.  அதன்படி ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட்- அபிஷேக் சர்மா களமிறங்கினர்.  அபிஷேக் சர்மா 12 ரன்களில்  ஆட்டமிழந்தார்.  அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அன்மோல்ப்ரீத் சிங் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து நிதிஷ் ரெட்டி களமிறங்கினார்.  டிராவிஸ் ஹெட் 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.  நிதிஷ் ரெட்டி அரைசதம் அடித்த பிறகும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி 76 ரன்கள் குவித்தார்.  பின்னர் இறங்கிய கிளாசென் அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் 42 ரன்களை குவித்தார்.

இதன் மூலம் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது.   அந்த அணியில் அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 76 ரன்கள் அடித்தார்.  ராஜஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.  இதனையடுத்து 202 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது.

Tags :
Indian Premier LeagueIPL2024Rajasthan RoyalsRRSRHSRH vs RRSunrisers Hyderabad
Advertisement
Next Article