Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"2025-ல் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவார்" - #NASA அறிவிப்பு!

02:02 PM Aug 25, 2024 IST | Web Editor
Advertisement

சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் உள்ள சுனிதா வில்லியம்ஸ், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பூமிக்கு திரும்புவார் என நாசா அறிவித்துள்ளது. 

Advertisement

அமெரிக்காவின் தனியார் நிறுவனமான போயிங் உருவாக்கியுள்ள ஸ்டார்லைனர், விண்கலம், சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு நபர்களை ஏற்றிச் செல்லும் 2வது தனியார் நிறுவன விண்வெளி ஓடம் ஆகும். கடந்த மாதத் தொடக்கத்தில் அது முதல்முறையாக விண்ணில் செலுத்தப்படுவதாக இருந்தது. அதை ஏந்திச் செல்லும் அட்லாஸ் ராக்கெட்டில் பழுது இருந்ததால் திட்டம் பல முறை ஒத்திவைக்கப்பட்டது.

இறுதியாக, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் மற்றொரு நாசா விஞ்ஞானியான பட்ச் வில்மோருடன் ஸ்டார்லைனர் கடந்த ஜூன் 5-ம் தேதி வெற்றிகரமாக செலுத்தப்பட்டு சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது. பின்னர் அவர்கள் இருவரும் அதே விண்கலம் மூலம் கடந்த ஜூன் 14-ம் தேதி மீண்டும் பூமி திரும்புவதாக இருந்தது. தொழில்நுட்ப பிரச்னைகள் காரணாக அந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டு, சா்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இருவரும் ஜூன் 26-ம் தேதி பூமி திரும்புவதாகவும் கூறப்பட்டது.

இதையும் படியுங்கள் : “அன்புச் சகோதரர் விஜயகாந்த் பிறந்தநாளில் அவரின் சாதனைகளை நினைவுகூறுகிறேன்” - #AIADMK பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி!

இதையடுத்து அந்தத் திட்டமும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்டார்லைனர் விண்கலனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 80 நாட்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் அடுத்தாண்டு பிப்ரவரியில் பூமிக்கு திரும்புகிறார்கள் என தெரிவித்துள்ளனர். போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலனை யாருமின்றி பூமிக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் பிப்ரவரி மாதம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலனில் அவர்கள் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா தெரிவித்துள்ளது.

Tags :
AnnouncementearthNASAreturnSunita Williams
Advertisement
Next Article